‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
அறிமுக இயக்குநர் முருகன் இயக்கத்தில், எட்டுத்தோட்டக்கள் புகழ் வெற்றி நாயகனாக நடிக்க சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள படம் 'பகலறியான்'. அக்ஷயா கந்தமுதன் நாயகியாகவும், சாய் தீனா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மூலக்கதையை கிஷோர் குமார் எழுதியுள்ளார். விவேக் சரோ இசையமைக்க, அபிலாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வருகிற 24ம் தேதி வெளிவருகிறது. இதையொட்டி படத்தின் இசை மற்றும் பாடல் வெளியீட்டு விழா நடந்தது.
விழாவில் நாயகி அக்ஷயா கந்தமுதன் பேசியதாவது : எனக்கு இயக்குநர் முருகன் அண்ணாவை பர்ஸனலாகவே தெரியும். மிகத் திறமையானவர். சினிமா மீது காதல் கொண்டவர். என்னை நம்பி இந்த கதாப்பாத்திரத்தைத் தந்ததற்கு நன்றி. இந்தப்படத்தில் உழைத்த அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் உழைத்தனர். நிறைய இரவுக்காட்சிகள் என்பதால் மிகவும் கஷ்டப்பட்டு உருவாக்கினோம். வெற்றி சார் இந்தபடத்தில் மிக வித்தியாசமாக நடித்துள்ளார். அவர் இந்தப்படத்திற்காக நிறைய உழைத்துள்ளார். இந்தப்படம் எனக்கு கனவுப்படம். இரண்டு வருட உழைப்புக்கு பிறகு வரும் படம். இந்த படம் கொஞ்சம் தாமதமாக வந்தாலும் எனக்கு வாழ்க்கை தந்த படம். அது வெற்றி பெற வேண்டும், இதில் பணியாற்றிய அனைவருக்கும் நல்ல எதிர்காலம் அமைய வேண்டும். என்றார்.
மேற்கொண்டு பேசமுடியாமல் கண்ணீர் சிந்தினார் அக்ஷயா. இவர் தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். அக்ஷயா இந்த படத்தை பெரிதும் நம்பி இருந்தார் படம் வெளியான பிறகு திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்கலாம் என்ற கனவு கண்டு கொண்டிருந்தர். படம் தாமதமாகவே தொலைக்சாட்சி தொடர்களில் நடிக்க தொடங்கி விட்டார். அந்த சோகமே அவரை அழவைத்து விட்டது என்றார்கள்.