டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

'கேஜிஎப்' படம் மூலம் பான் இந்தியா இயக்குனர் என்ற அந்தஸ்தைப் பெற்றவர் கன்னட இயக்குனர் பிரசாந்த் நீல். தற்போது 'சலார் 2' வேலைகளில் உள்ளார். இந்தப் படத்தை முடித்த பின் ஜுனியர் என்டிஆர் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போகிறார்.
இந்தப் படத்திற்காக 'டிராகன்' என்ற தலைப்பை வைக்க முடிவு செய்தனர். ஆனால், ஹிந்தியில் அத்தலைப்பு இயக்குனர் கரண் ஜோஹர் வசம் இருந்தது. ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிப்பில் வெளிவந்த 'பிரம்மாஸ்திரா' படத்திற்கு முதலில் 'டிராகன்' என்ற தலைப்பை வைக்க முடிவு செய்து அப்பெயரை பதிவு செய்து வைத்திருந்தனர்.
தற்போது ஜுனியர் என்டிஆர் படத்திற்காக அத்தலைப்பை அவரிடம் கேட்டதும், எந்தவிதமான தொகையும் பெற்றுக் கொள்ளாமல் அத்தலைப்பை விட்டுக் கொடுத்துவிட்டார் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கனாதன் நடிக்கும் படத்திற்கும் 'டிராகன்' என்ற தலைப்பை அறிவித்துவிட்டார்கள். இத்தலைப்புக்கு ஜுனியர் என்டிஆர் படத்தயாரிப்பு நிறுவனம் எதிர்ப்பு தெரிவிக்குமா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.