'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றம் பலர் நடிக்கும் படம் 'இந்தியன் 2'. ஜுலை மாதம் வெளியாகலாம் என்று சொல்லப்படும் இப்படத்தின் புரமோஷன் இன்று முதல் ஆரம்பமாகிறது.
பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் இன்று நடைபெற உள்ள முக்கிய போட்டியான சென்னை, பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஷங்கர், கமல்ஹாசன் ஆகியோர் பங்கேற்க உள்ளார்கள். இந்த நிகழ்ச்சி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஹிந்தி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் ஆகிய டிவிக்களில் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
இன்று நடைபெறும் போட்டி முக்கியமான போட்டி. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை அணி பிளே ஆப் சுற்றில் பங்கேற்க முடியும். எனவே, இன்றைய போட்டிக்கு எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. இந்த சூழலில் இன்றைய டிவி நிகழ்ச்சியில் ஷங்கர், கமல்ஹாசன் பங்கேற்பது படத்திற்கான சரியான புரமோஷனமாக அமையும்.
இனிமேல், 'இந்தியன் 2' பற்றிய அப்டேட்டுகள் தொடர்ந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.