அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' | பிளாஷ்பேக் : ரீமேக்கிலும் வெற்றி பெற்ற 'மார்க்கண்டேயா' | டொவினோ தாமஸ், கயாடு லோகரின் பள்ளிச்சட்டம்பி ரிலீஸ் தேதி அறிவிப்பு | சத்தா பச்சா பட முதல் டிக்கெட்டை வாங்கி ஆன்லைன் விற்பனையை துவங்கி வைத்த மோகன்லால் |

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரண்டு வேடங்களில் நடித்து வெளியான படம் சர்தார். கடந்த 2022ம் ஆண்டு வெளியான இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்தது. அப்படத்தில் மினரல் வாட்டர் என்ற பெயரில் விற்கப்படும் குடி தண்ணீரில் இருக்கும் தீங்கு, இந்த தண்ணீரின் பின்னணியில் இருக்கும் வணிக அரசியல் ஆகியவற்றை வெளிச்சம் போட்டார் மித்ரன்.
இந்நிலையில் மீண்டும் கார்த்தியை வைத்து தான் இயக்கும் சர்தார்- 2 படத்தை போதை பொருள் கடத்தல் பின்னணியை மையமாகக் கொண்ட கதையில் அவர் இயக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக போதை பொருட்கள் சமுதாயத்தை எந்தெந்த வகையில் பாதிக்கிறது என்பதை இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.




