அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
சினிமா நடிகைகளின் புகைப்படங்கள் என்றால் அவர்களது ஆடைகளைப் பற்றியும், அவர்கள் அணிந்திருக்கும் நகைகளைப் பற்றியும்தான் பேசுவார்கள். ஆனால், நடிகை சமந்தா அவர் கட்டியிருந்த வாட்ச் பற்றிப் பேச வைத்திருக்கிறார்.
சில தினங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாவில் சில புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார் சமந்தா. அதில் அவர் கட்டியிருந்த கைக்கடிகாரத்தின் மதிப்பு 70 லட்சம் ரூபாயாம். செர்பென்ட்டி ஸ்பிகா வாட்ச் என்ற அந்த கைக்கடிகாரத்தில் டயமண்ட் பதிக்கப்பட்டிருக்கிறதாம். பிரேஸ்லெட் போன்ற தோற்றத்தில் இருக்கும் வாட்ச் அது.
சில அரசியல் பிரபலங்கள் கட்டியுள்ள கைக்கடிகாரங்களின் மதிப்பு பற்றி சமீப காலங்களில் பேசப்பட்டது. இப்போது சினிமா பிரபலமான சமந்தாவின் வாட்ச் பேசுபொருளாகி உள்ளது. மாடலிங்கிற்காக சமந்தா கட்டியிருந்த வாட்ச்சா அல்லது அவருக்கு சொந்தமானதா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.