ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி | ரோல் மாடலுக்கு முத்தமிட்டு, மண்டியிட்டு மரியாதை செலுத்திய அஜித் | 'விக்ரம் 63' படத்தின் கதாநாயகி யார்? | வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சூரி என்ன சொன்னார் தெரியுமா? | இசையமைப்பாளர் சாம் சிஎஸ் மீது மோசடி புகார் | படப்பிடிப்பில் ராஷி கண்ணா காயம் | மீண்டும் லாயர் ஆகிறார் விஜய் ஆண்டனி | டெரர் போலீஸ் அதிகாரியாக சாய் தன்ஷிகா | பிளாஷ்பேக்: மோகனுக்கு குரல் கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 75 ஆண்டுகளுக்கு முன்பே 'அவருக்கு பதில் இவர்' |
மலையாள திரையுலகில் பிரேமம் படம் மூலமாக மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் நடிகர் நிவின்பாலி. அதன் பிறகு தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து கேரளாவில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் அதிக அளவிலான ரசிகர்களை பெற்றார். ஆனால் சமீப காலமாக அவரது படங்கள் சரியான வரவேற்பை பெறாத நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வினீத் சீனிவாசன் இயக்கத்தில் வெளியான ‛வருஷங்களுக்கு சேஷம்' என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் ஒரு கம்பேக் கொடுத்துள்ளார். இந்த வெற்றியுடன் சூட்டோடு சூடாக அவர் நடித்துள்ள ‛மலையாளி பிரம் இந்தியா' என்கிற படம் வரும் மே-1ல் வெளியாக இருக்கிறது.
மலையாளத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய ஜன கன மன படத்தை இயக்கிய டிஜோ ஜோஸ் ஆண்டனி இந்த படத்தை இயக்கி இருப்பதால் நிச்சயம் இந்த படம் நிவின்பாலியை இன்னும் மேலே கை தூக்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷனுக்காக 'வேர்ல்ட் மலையாளி ஆந்தம்' தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இந்த ஆல்பத்திற்கு தமிழில் குரல் கொடுத்துள்ளதுடன் பாடலையும் எழுதியுள்ளார் பிக் பாஸ் புகழ் அசல் கோலார்.