குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த வருடம் விடுதலை படத்தின் முதல் பாகம் வெளியானது. சூரி கதையின் நாயகனாக நடித்த இந்தப் படத்தில் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் துரிதமாக நடைபெற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
சமீபத்தில் சர்வதேச திரைப்படம் விழா ஒன்றில் விடுதலை படத்தின் இரண்டு பாகங்களும் திரையிடப்பட்டன. முதல் பாகத்தில் போலீஸ் அதிகாரிகளாக நடித்திருந்த கவுதம் மேனன் மற்றும் சேத்தன் இருவருமே தங்களது நடிப்பால் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றனர். குறிப்பாக ஒரு கொடூரமான போலீஸ் அதிகாரியாக சேத்தனின் நடிப்பு படம் பார்த்த ரசிகர்களுக்கு ஆத்திரத்தை வரவழைக்கும் அளவிற்கு வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் சமீபத்தில் திரைப்பட விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சூரி பேசும்போது, “இந்த இரண்டாம் பாகத்தில் சேத்தனின் அட்ராசிட்டி இன்னும் அதிகமாக இருக்கும். தயவு செய்து படம் ரிலீஸ் ஆகும் சமயத்தில் ஒரு வாரம் அவரை வெளியில் எங்கும் விடாமல் வீட்டிலேயே அடைத்து வைக்குமாறு அவரது வீட்டாரிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்று ஜாலியாக ஒரு கோரிக்கை விடுத்தார் சூரி. அந்த அளவிற்கு இந்த இரண்டாம் பாகத்திலும் சேத்தனின் கதாபாத்திரம் இன்னும் வலுவாக இடம் பெற்றுள்ளதாக சூரியின் பேச்சிலிருந்து தெரிகிறது.