டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் | தமிழ் படத்தில் மாலத் தீவு நடிகை | பிளாஷ்பேக்: பக்தி படத்தில் விஜயகாந்த் | பிளாஷ்பேக்: வில்லத்தனத்தில் மிரட்டி, வறுமையில் வாடிய நடிகை | ஐமேக்ஸ் தியேட்டர்கள் : 'ஜனநாயகன், தி ராஜா சாப்' படங்களுக்குப் புதிய சிக்கல் |

மலையாள திரையுலகில் நடிப்பு திறமை, கவர்ச்சி என இரண்டையும் ஒன்றாக கொண்டவர் நடிகை ஸ்வேதா மேனன். இப்போதும் இவர் நடித்த ரதி நிர்வேதம் படம் தான் இவரது விலாசமாக ரசிகர்களிடம் அறியப்படுகிறது. ஆனால் அதையும் தாண்டி கடந்த சில வருடங்களுக்கு முன்பு 'களிமண்ணு' என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்தார் ஸ்வேதா மேனன்.
அந்த படத்தை இயக்கியவர் தான் தற்போது பிரித்விராஜ் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் ஆடுஜீவிதம் படத்தை இயக்கியுள்ள இயக்குனர் பிளஸ்சி. 'களிமண்ணு' படத்திற்காக அப்போது நிஜமாகவே கர்ப்பமாக இருந்த ஸ்வேதா மேனன் தனது பிரசவத்தையே சினிமாவுக்காக படம் பிடிக்கும் அனுமதியையும் இயக்குனருக்கு வழங்கினார். அந்த சமயத்தில் அது பரபரப்பாக பேசப்பட்டது.
தற்போது ஆடுஜீவிதம் படம் வரும் மார்ச்-28ல் வெளியாகவுள்ள நிலையில் இயக்குனர் பிளஸ்சிக்கும் அவரது படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் ஸ்வேதா மேனன். இயக்குனர் பிளஸ்சி பற்றி அவர் கூறும்போது, “கிட்டத்தட்ட பிளஸ்சியின் 11 வருட தவம் இது. களிமண்ணு படத்தில் அவருடன் நான் பணியாற்றிக் கொண்டிருந்த நாட்களிலேயே அவர் இந்த கதையுடன் பயணிக்க துவங்கி விட்டார். இது பற்றிய அவர் என்னிடம் நிறைய பேசி இருக்கிறார். எல்லா நட்சத்திரங்களும் இணைந்து பணியாற்ற விரும்பும் வெகுசில இயக்குனர்களில் பிளஸ்சியும் ஒருவர்” என்று கூறியுள்ளார் ஸ்வேதா மேனன்.




