'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
பிரசாந்த் வர்மா இயக்கத்தில், தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர், வரலட்சுமி, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிப்பில் சங்கராந்தியை முன்னிட்டு வெளியான தெலுங்குப் படம் 'ஹனுமான்'. இப்படம் பான் இந்தியா படமாக வெளியாகி உலகம் முழுவதும் 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.
கடந்த வாரம் இப்படம் ஓடிடி தளத்தில் தெலுங்கில் மட்டுமே வெளியானது. வெளியான 11 மணி நேரங்களில் 102 மில்லியன் நிமிடங்கள் பார்க்கப்பட்டு புதிய சாதனையைப் படைத்துள்ளது. அது மட்டுமல்ல உலக அளவில் நம்பர் 1 இடத்தில் டிரென்டிங்கில் உள்ளது.
தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும் வெளியாகவில்லை. அதற்கு தொழில்நுட்ப ரீதியான தாமதம் என்று சொல்கிறார்கள். மற்ற மொழிகளிலும் ஓடிடியில் வெளியானால் இப்படம் தியேட்டர்களில் அதிக நாட்களில் ஓடிக் கொண்டிருப்பது போல ஓடிடி தளத்திலும் அதிக நிமிடங்கள் பார்க்கப்படும் படமாக அமையும்.