தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் | பிளாஷ்பேக் : 3 இயக்குனர்கள் இயக்கிய புராண படம் | பிளாஷ்பேக் : ஹீரோயின் ஆக நடித்த டி.ஏ.மதுரம் |
நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள 'ஆடுஜீவிதம்' திரைப்படம் வரும் மார்ச் 28ம் தேதி வெளியாக இருக்கிறது. பிளஸ்சி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இந்த படம் பென்யமின் என்கிற எழுத்தாளர் எழுதிய ஆடுஜீவிதம் என்கிற நாவலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. அரபு நாட்டுக்கு வேலைக்குச் சென்று அங்கே ஒட்டகம் மேய்க்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு பல சிரமங்களை சந்தித்த நஜீப் என்பவரின் நிஜமான வாழ்க்கை சம்பவங்களை மையப்படுத்தியே இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்த கதையின் நிஜ ஹீரோவான நஜீப்புக்கு 'ஆடுஜீவிதம்' திரையிட்டு காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த நஜீப் மிகவும் நெகிழ்ந்து போய் கண்கலங்கி விட்டார். இது குறித்து அவர் கூறும்போது, இயக்குனர் பிளஸ்சியும், பிரித்விராஜும் சேர்ந்து தான் வாழ்ந்த நிஜமான வாழ்க்கையை திரையில் காட்டி உள்ளார்கள் என்றும் குறிப்பாக ஒருநாள் பிரித்விராஜ் தூங்கி விழித்து வலியுடன் எழும்போது தனது மனைவி பெயரை கூவி அழைக்கும் காட்சியில் தனது கண்களில் கண்ணீர் வந்துவிட்டது என்றும் கூறியுள்ளார்.
மேலும் பிரித்விராஜ் நீண்ட நாட்களாக தன் முகத்தை தானே பார்க்க முடியாத நிலையில் ஒருநாள் கண்ணாடியில் பார்த்து அதிர்ச்சி அடையும் காட்சியானது, அதேபோன்று தான் நிஜத்தில் அனுபவித்த கொடுமையை நினைவூட்டியது என்றும் கூறியுள்ளார். இந்த படத்தை தனது குடும்பத்தினரும் நண்பர்களும் திரையரங்கில் பார்க்க ஆவலாக இருப்பதாக கூறியுள்ளார் நஜீப்.