தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக இருக்கிறது. இதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் பல பேட்டிகளில் படம் குறித்த பல தகவல்களை கூறி வருகிறார். இன்று லோகேஷ் கனகராஜ் என்றாலே எல்சியு அதாவது 'லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்' என்று சொல்லும் அளவிற்கு அந்த வார்த்தை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டது. அடுத்ததாக அவர் 'கைதி 2' படத்தை இயக்கப் போகிறார் என்பதும் ஏற்கனவே முடிவாகிவிட்டது.
அதேசமயம் இந்த எல்சியு பற்றியும் கைதி-2 படம் குறித்தும் லோகேஷ் கனகராஜ் கூறும்போது, “எல்சியு மையப்படுத்தி படம் எடுப்பதால் ஏற்கனவே எல்சியுவில் உள்ள இன்னொரு படத்தில் நடித்த சின்னச்சின்ன நடிகர்கள் இந்த படத்தில் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இறந்து போன நடிகர்கள் மீண்டும் இடம் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு ஏன், எல்சியுவில் இன்னொரு படத்தில் குரூப் டான்ஸ் ஆடிய அல்லது சண்டைக் காட்சிகள் நடித்த கலைஞர்கள் கூட புதிதாக தயாராகும் எல்சியுவின் புதிய படத்தில் இல்லாத மாதிரி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.