தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் | எம்புரான் சர்ச்சையால் விருது குழுவால் புறக்கணிக்கப்பட்ட ஆடுஜீவிதம் : ஊர்வசி குற்றச்சாட்டு | தலைவன் தலைவி ரூ.75 கோடி வசூல் | விளம்பர வீடியோவில் உலக சாதனை படைத்த தீபிகா படுகோனே | கமல்ஹாசன் வாழ்த்தினார் : மற்றவங்க தேசிய விருது பெற்றவர்களை பாராட்டாத சினிமாகாரர்கள் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில், விவேக் எழுதி, சந்தோஷ் நாராயணன், தி இந்தியன் கோரல் என்சம்பிள் குழு உடன் இணைந்து பாடிய 'ரெட்ரோ' படப் பாடல் 'கனிமா'. இந்தப் பாடல் வெளியானதுமே உடனடியாக ஹிட் ஆனது. பாடலில் இடம் பெற்ற சூர்யா, பூஜா ஹெக்டே, சந்தோஷ் நாராயணன் ஆகியோரது நடனம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதைத் தொடர்ந்து எண்ணற்ற ரீல்ஸ்கள் இப்பாடலை வைத்து உருவாக்கப்பட்டது.
மார்ச் 21ம் தேதி யு டியுப் தளத்தில் இதன் லிரிக் வீடியோ பாடல் வெளியானது. அப்பாடல் தற்போது 100 மில்லியன் பார்வைகளை யு டியூப் தளத்தில் கடந்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியான பாடலின் முழு வீடியோ 50 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
சந்தோஷ் நாராயணன் இசையில் இதற்கு முன்பு 'ஜகமே தந்திரம்' படத்தின் 'புஜ்ஜி' பாடல், 'ரகிட ரகிட' ஆகிய பாடல்கள் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.