பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் |

மோகன்லால் தற்போது ஒரு பக்கம் சீனியர் மற்றும் பிரபலமான இயக்குனர்களுடன் பணியாற்றிக் கொண்டே இன்னொரு பக்கம் கவனம் ஈர்க்கும் இளம் இயக்குனர்களின் படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி டைரக்ஷனில் வெளியான மலைக்கோட்டை வாலிபன் என்கிற படத்தில் நடித்திருந்தார் மோகன்லால். இன்னொரு பக்கம் தற்போது நடிகர் பிரித்விராஜின் டைரக்ஷனில் 'லூசிபர் 2 - எம்பிரான்', பிரபல இயக்குனர் ஜோஷி டைரக்சனில் 'ரம்பான்' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது மோகன்லாலின் 360வது படத்தை வெறும் இரண்டு படங்களை மட்டுமே இயக்கிய இயக்குனர் தருண் மூர்த்தி என்பவர் இயக்க உள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த தருண் மூர்த்தி கடந்த 2021ல் வெளியான ஆபரேஷன் ஜாவா என்கிற படத்தின் மூலம் ரசிகர்களை புருவம் உயர்த்த வைத்தவர். அதன்பிறகு சவுதி வெள்ளக்கா என்கிற சின்ன பட்ஜெட் படத்தை இயக்கிய இவருக்கு ஜாக்பாட் பரிசாக மோகன்லாலின் 360வது படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.




