ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
நடிகர் மோகன்லால் தற்போது தெலுங்கில் உருவாகி வரும் விருஷபா என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதை தொடர்ந்து விஷ்ணு மஞ்சு நடிப்பில் புராண படமாக உருவாகி வரும் கண்ணப்பா என்கிற படத்தில் சிவபெருமானாக கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். இந்த நிலையில் தற்போது திருப்பதி வந்த மோகன்லால் திருமலை சென்று அங்கே ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார்.
மேலும் மோகன்லால் டைரக்ஷனில் உருவாகியுள்ள பரோஸ் திரைப்படமும் விரைவில் வெளியாக இருக்கிறது. அதற்கான வேண்டுதலுக்காகவும் மோகன்லால் திருப்பதிக்கு வந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. இது தவிர பிரித்விராஜ் டைரக்ஷனில் லூசிபர் இரண்டாம் பாகமாக உருவாகும் எம்புரான் மற்றும் மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனர் ஜோஷி இயக்கி வரும் ரம்பான் ஆகிய படங்களில் மோகன்லால் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.