ககொ ககொ - கா கா, விரைவில் ரீ ரிலீஸ் | 'தொடரும்' வரவேற்பு : மோகன்லால் அன்புப் பதிவு | நானிக்காக அனிருத் பாடிய தானு பாடல் வெளியீடு | பீனிக்ஸ் வீழான் ஜூலை நான்காம் தேதி ரிலீஸ் | கேங்கர்ஸ் படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | விஜய் சேதுபதியுடன் மோதும் பஹத் பாசில் | சூர்யா 46வது படத்தின் படப்பிடிப்பு எப்போது | இட்லி கடை படத்தின் அப்டேட் தந்த அருண் விஜய் | மதகஜராஜா ; சுந்தர் சி சொன்ன வார்த்தை பலித்துவிட்டது : சந்தானம் | ஏப்., 30ல் கிஸ் முதல் பாடல் வெளியீடு |
சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பிரபலமான ஸ்ரீகுமார், இசையமைப்பாளர் சங்கர் கணேஷின் மகன் ஆவார். ஆரம்ப காலக்கட்டத்தில் சினிமாவில் நுழைய அதிக முயற்சிகளை எடுத்த ஸ்ரீகுமார் சினிமாவில் தனது சாதியால் தனக்கு ஏற்பட்ட அவமானம் குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
அந்த பேட்டியில், 'பல இடங்களில் என் சாதியை வைத்து தாழ்த்தி பேசுவார்கள். ஒரு படத்தில் நடிக்க சென்ற போது என்னுடைய பேச்சை வைத்து இவன் அந்த ஆளுதானே என்று சொன்னார்கள். அருகில் இருந்தவரும் ஆமாம், வேறு வழியில்லாமல் தான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தேன் என்று கூறினார். திறமையை வைத்து இல்லாமல் சாதியை பார்த்து வாய்ப்பு தருகிறார்கள். இப்போதும் சினிமாத்துறையில் சாதி பிரச்னை இருக்கத்தான் செய்கிறது' என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.