செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
சின்னத்திரை நடிகையான சாய் காயத்ரி விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே, பாண்டியன் ஸ்டோர்ஸ், சிவா மனசுல சக்தி ஆகிய தொடர்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். தற்போது சீரியல்களில் பெரிய அளவில் தலைக்காட்டாத சாய் காயத்ரி 'சாய் சீக்ரெட்ஸ்' என்கிற பெயரில் அழகுசாதன பொருட்கள் தயாரிக்கும் கம்பெனி ஒன்றை ஸ்டார்ட் செய்துள்ளார். அந்த கம்பெனியின் கீழ் அவர் தயாரிக்கும் ஹேர் ஆயிலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து அதிக அளவில் வியாபாரம் ஆகிறது. இதை மகிழ்ச்சியுடன் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள சாய் காயத்ரி, ஹேர் ஆயில் தயாரிப்பதிலிருந்து பேக்கிங் டெலிவரி என ஒரு பெரிய குழுவே வேலை செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனையடுத்து சாய் காயத்ரியின் இந்த வளர்ச்சியை பார்க்கும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவித்து வருகின்றனர்.