ஜானி மாஸ்டர் கைது செய்யப்படுவாரா ? | 400 கோடி வசூலைக் கடந்த 'தி கோட்' | சூர்யாவின் கங்குவா ரிலீஸ் - இரண்டு தேதிகளை திட்டமிடும் படக்குழு! | டிசம்பரில் வெளியாகும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி! | கிறிஸ்துமஸ்க்கு வெளியாகும் அஜித்தின் விடாமுயற்சி! | வாழை படத்தின் இரண்டாம் பாகம்! - மாரி செல்வராஜ் தகவல் | பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விஜய், ரஜினி! | நெருக்கமான காட்சிகளில் நடிப்பது எளிதல்ல - மாளவிகா மோகனன் | ஹிந்தி படத்தின் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ் | தனுஷ் இயக்கத்தில் இட்லி கடை? |
செக் மோசடி வழக்கில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர் சிவசக்தி பாண்டியனனை போலீசார் கைது செய்தனர். சிவசக்தி பாண்டியன் பிரபல நடிகர் அல்லு அர்ஜூனை வைத்து தயாரித்த படத்திற்காக தனியார் டிவி நிறுவனத்தில் ரூ.1 கோடியே 70 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அந்தப் பணத்திற்காக காசோலைகளை திருப்பி கொடுத்துள்ளார்.
அந்த டிவி நிறுவனம் பலமுறை பணத்தை திருப்பி கேட்டும் சிவசக்தி பாண்டியன் பணத்தை கொடுக்காததால் நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனையடுத்து அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. நுங்கம்பாக்கம் போலீசார் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனை அவரது இல்லத்தில் வைத்து கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். பின்னர் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.