போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் |
பாலிவுட்டின் பிரபல நடிகை ஊர்வசி ரவுடேலா. தமிழில் அருள் சரவணன் நடித்த லெஜண்ட் படத்தில் நாயகியாக நடித்தார். தற்போது கன்னட, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். நேற்று (பிப்., 25) அவர் தன்னுடைய 30வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது ஊர்வசிக்கு 24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட கேக்கை பாடகர் யோ யோ ஹனி சிங் என்பவர் பரிசாக அளித்து இருக்கிறார். இதன் மதிப்பு மூன்று கோடி என்கிறார்கள்.
அவர் கூறும்போது, ‛‛ஊர்வசி ரவுட்டாலா உலகிலேயே அழகான பெண். அதனால்தான் இந்த தங்க கேக்கை பிறந்தநாளுக்கு பரிசாக அளித்தேன்'' என்று தெரிவித்துள்ளார் ஹனி சிங்.
ஊர்வசி வெளியிட்ட பதிவில் ‛‛எனது திரைப்பயணத்தில் ஓர் அங்கமாக இருக்கும் யோயோ ஹனி சிங்கிற்கு நன்றி'' என பதிவிட்டுள்ளார் ஊர்வசி.
இந்த தங்க முலாம் பூசப்பட்ட பிறந்தநாள் கேக் குறித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார் ஊர்வசி. அவை வைரலாகின.