இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

பாண்டவர் பூமி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த ஷமிதா, சின்னத்திரை நடிகர் ஸ்ரீகுமாரை திருமணம் செய்து கொண்டார். தற்போது ஸ்ரீகுமாரும் ஷமிதாவும் சின்னத்திரை சீரியல்களில் பிசியாக நடித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக செய்தி பரவிய நிலையில் அண்மையில் அளித்துள்ள பேட்டியில் அதுகுறித்து விளக்கமளித்துள்ளனர்.
அதில் பேசிய ஸ்ரீகுமார், ‛என்னுடைய நண்பர்களே என்னிடம் பேசும்பொழுது நான் என் மனைவியை விட்டு பிரிந்துவிட்டேனா என்று கேட்கிறார்கள். நான் உடனே என் பொண்டாட்டிக்கு போன் செய்து தர்றேன் நீங்களே கேளுங்க என்று சொல்வேன். நாங்கள் இருவரும் ஒருதுறையில் வேலை செய்வதால் எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது' என்று கூறியுள்ளார்.
மேலும், பேசிய ஷமிதா, 'என் பிறந்தவீட்டிலும் சரி, புகுந்த வீட்டிலும் சரி, நான் இப்படிதான் இருக்க வேண்டும் என்று எந்த கட்டளையும் கிடையாது. ஸ்ரீயும் எனக்காக நிறையவே விட்டு கொடுக்கிறார். திருமணமான முதல் 5 வருடத்தில் சின்ன சின்ன பிரச்னைகள் வந்தது என்றாலும் அதுவெல்லாம் காணாமல் போய்விட்டது' என்று கூறியுள்ளார்.