ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
மலையாள திரையுலகில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ஜெகதி ஸ்ரீகுமார். இவரை கேரளாவின் கவுண்டமணி என்று அங்கே அழைப்பதுண்டு. முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் போதும் சரி, தனி காமெடி காட்சிகளில் நடிக்கும் போதும் சரி ரசிகர்களை சிரிக்க வைக்க தவறாதவர். அப்படிப்பட்டவர் கடந்த 2012ல் ஒரு கார் விபத்தில் சிக்கி உயிருக்கே ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து பல வருடங்கள் சிகிச்சை அளிக்கப்பட்டதன் பலனாக மற்றவர்களுடன் ஓரளவுக்கு பேசுவதற்கும் ஒன்று, இரண்டு நிகழ்ச்சிகளில் கைத்தாங்கலாக அழைத்து வரப்பட்டு கலந்துகொள்ளும் அளவிற்கு உடல் நலம் தேறியது.
ஆனால் சினிமாவில் நடிக்கும் அளவிற்கு அவருக்கு உடல் ஒத்துழைக்கவில்லை. இருந்தாலும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான சிபிஐ படத்தின் ஐந்தாம் பாகத்தில் இவர் ஏற்கனவே நான்கு பாகங்களில் நடித்திருந்த அதே கதாபாத்திரத்தில் நடித்தார். இவரது வசதிக்காக அவர் வீட்டிலேயே அமர்ந்திருப்பது போன்று காட்சிகளை படமாக்கினார்கள். இந்த நிலையில் சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது வல (வலை) என்கிற படத்தில் படம் முழுவதும் வரும் விதமாக ஒரு சயின்டிஸ்ட் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஜெகதி ஸ்ரீகுமார்.
கடந்த வருடம் சிறிய பட்ஜெட்டில் சயின்ஸ் பிக்சன் படமாக வெளியாகி வரவேற்பை பெற்ற ககனாச்சாரி படத்தை இயக்கிய அருண் சந்து தான் இந்த படத்தையும் இயக்குகிறார். இந்த படத்தில் ஜெகதி ஸ்ரீகுமாருக்கு சயின்டிஸ்ட் வேடம் என்றாலும் அவரது உடல் நிலையை கணக்கில் கொண்டு எலக்ட்ரிக் சக்கர நாற்காலியிலேயே வலம் வருவது போல அவரது கதாபாத்திரத்தை உருவாக்கி இருக்கிறார்கள். நேற்று (ஜன.5) ஜெகதி ஸ்ரீகுமாரின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி உள்ள போஸ்டரிலும் இதை பார்க்க முடிகிறது.