ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' | பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி |

மலையாள நடிகை திவ்யா உன்னி கடந்த 20 வருடங்களுக்கு முன்பு தமிழில் 'கண்ணன் வருவான், வேதம், பாளையத்தம்மன், சபாஷ்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு திருமணம், பின்னர் விவாகரத்து, அதன் பிறகு இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். நடனத்தில் கைதேர்ந்தவரான திவ்யா உன்னி தற்போது அங்கே பரத நாட்டிய வகுப்புகள் எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளா வந்த திவ்யா உன்னி, கொச்சி நேரு ஸ்டேடியத்தில் 11 ஆயிரத்து 600 பரதநாட்டிய கலைஞர்களுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடி கின்னஸ் சாதனை செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அத்தனை பேர் இருந்தாலும் அந்த நிகழ்ச்சியின் முக்கிய முகமாக திவ்யா உன்னி தான் இருந்தார். அமைச்சர் ஷாஜி செரியன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கேரள எம்எல்ஏ உமா தாமஸ் என்பவர் வருகை தந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக எதிர்பாராத விதமாக மேடையில் இருந்து கால் தவறி 15 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து விட்டார் எம்எல்ஏ உமா தாமஸ். பலத்த அடிபட்ட அவருக்கு தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நடிகை திவ்யா உன்னி இந்த நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் அமெரிக்காவிற்கு கிளம்பி சென்று விட்டார். தற்போது இது குறித்து நடிகை காயத்ரி வர்ஷா என்பவர் வெளியிட்டுள்ள பதிவில், “திவ்யா உன்னியின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த எம்எல்ஏ காயம்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை மருத்துவமனையில் சென்று திவ்யா உன்னி நலம் விசாரிக்கவில்லை. குறைந்தபட்சம் அவரது உடல்நலம் நன்றாக வேண்டும் என்று சோசியல் மீடியாவில் கூட ஒரு பதிவு வெளியிடவில்லை. இந்த அளவிற்கு ஒருவர் சுயநலமாக இருக்கக் கூடாது” என்றும் விமர்சித்துள்ளார்.




