சினிமாவிலிருந்து ஓய்வு பெறும் பவன் கல்யாண்? | இளம் இயக்குனர்களுடன் ரஜினி திடீர் சந்திப்பு | ஐபிஎல் கிரிக்கெட்டில் அனிருத் கச்சேரி | பிளாஷ்பேக் : ஏகாதசி விரதத்தை பிரபலமாக்கிய படம் | துபாயில் அட்லி - அல்லு அர்ஜுன் தீவிர ஆலோசனை | வீர தீர சூரன் OTT-யில் வருமா? வராதா? | நெட்பிளிக்ஸிலும் வரவேற்பை பெற்ற "டிராகன்" | எல் 2 எம்புரான் - முதல் நாள் முன்பதிவிலும் சாதனை | ராஜமவுலி படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிருத்விராஜ் | பதட்டத்துடன் சிக்கந்தர் படப்பிடிப்பை நடத்திய ஏ.ஆர். முருகதாஸ் |
பிரபல சின்னத்திரை நடிகரான ஸ்ரீகுமார் சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலுமே நடித்து வருகிறார். இவர் அண்மையில் விழா ஒன்றில் பேசிய போது மூத்த நடிகையான வடிவுக்கரசியை புகழ்ந்து பேசியிருக்கிறார். அவர் பேசிய போது, 'ஒரு சில நடிகைகள் இன்று சீரியலில் கதாநாயகி வாய்ப்பு கிடைத்துவிட்டாலே எனக்கு அவரை தெரியும் இவரை தெரியும் என திமிராக நடந்து கொள்கிறார்கள். மற்றவர்களை இளக்காரமாக நடத்துகிறார்கள். இவர்களை பார்த்தால் எரிச்சல் வரும். ஆனால், வடிவுக்கரசி அம்மா அப்படியில்லை. சிவாஜி, ரஜினி, கமல் என எல்லோருடனும் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும் யாரிடமும் திமிராக நடந்து கொள்ளமாட்டார். தன்னுடன் நடிப்பவர்களை அரவணைத்து கொண்டு செல்வார்' என புகழ்ந்து பேசியிருக்கிறார்.