'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழ் சினிமாவில் மூத்த நடிகை வடிவுக்கரசி. தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் சுமார் 400 படங்கள் நடித்துள்ளார். சில படங்களில் நாயகியாகவும், பல படங்களில் வில்லி மற்றும் குணச்சித்ர வேடங்களிலும் நடித்துள்ளார். இன்றைய தலைமுறை நடிகர்களுடனும் நடித்து வரும் இவர் சினிமா தவிர்த்து நிறைய சீரியல்களிலும் நடிக்கிறார்.
இன்றைக்கு சினிமாவில் நடிக்க ஆசைப்படுவர்களுக்கு சமூக வலைதளங்கள் பெரும் உதவியாக இருக்கின்றன. குறிப்பாக பிரபலங்கள் நடித்ததை, நடனம் ஆடியதை ரீல்ஸாக போட்டு பிரபலமாகி சினிமாவிலும் சிலர் வாய்ப்பை பெற்றுள்ளனர். உதாரணத்திற்கு நடிகை மிருணாளினி ரவியை கூறலாம். இந்நிலையில் ரீல்ஸ் பிரபலங்கள் சினிமாவில் திணறுவதாக வடிவுக்கரசி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‛‛இன்றைக்கு நிறைய பேர் ரீலீஸ் பண்றாங்க. அவர்களுக்கு இருக்கும் நிறைய பாலோயர்களை பார்த்து சில இயக்குனர்கள் சினிமாவில் வாய்ப்பு தராங்க. பெரிய பெரிய நடிகர்கள் நடிச்சத, பாட்டு பாடியத இவுங்க எடுத்து ரீல்ஸ் போடுறாங்க. ஆனால் அவர்களுக்கென்று ரியல் டயலாக் கொடுத்து பேச சொன்னால் திணறுறாங்க. நான் நடிக்கும் படங்களில் இதை பார்த்து சில இயக்குனர்களிடம் கேட்டுள்ளேன். அதற்கு இயக்குனர்கள் அவர்களுக்கு ஆயிரம் பாலோயர்கள் இருக்காங்கன்னு சொல்றாங்க. இவர்கள் திணறுவதால் எல்லோருடைய நேரமும், பணமுமே வீணாகிறது. ரீல்ஸ் வந்து பொழுபோக்குக்காக செய்வது. ஆயிரம் பாலோயர்கள் அதுவரை தான் இருப்பாங்க'' என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.