பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! |
மலையாள நடிகையான நஸ்ரியா தமிழில் நேரம், ராஜா ராணி போன்ற படங்களில் நடித்தார். சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும்போதே மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் சினிமாவை விட்டு ஒதுங்கியவர் இப்போது மீண்டும் நடித்து வருகிறார். நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் ஒரு புதிய வெப் தொடரில் நஸ்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சாந்தனு நடித்துள்ளார்.
இயக்குனர் ஏ.எல்.விஜய் தயாரிக்கும் இந்த வெப் தொடரை சூர்யா பிரதாப் இயக்குகிறார். சென்னையில் நடந்த கொலை குறித்து உருவாகியுள்ள இந்த தொடரின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக சென்னையில் நடைபெற்று வந்தது. இப்போது இதன் மொத்த படப்பிடிப்பை 100 நாட்களில் நஸ்ரியா நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த வெப் தொடர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.