பா.விஜய் இயக்கத்தில் ஜீவா- அர்ஜுன் நடிக்கும் 'அகத்தியா' | ஒரு டிரைலரிலேயே முழு படத்தைக் காட்டிய 'சிங்கம் அகைன்' டிரைலர் | 69வது படத்திற்காக விஜய் பின்னணி பாடிய ஒன் லாஸ்ட் சாங்! | மைசூரு தசரா விழாவில் இளையராஜா, ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி | முதன்முறையாக ரீமேக் ; கொள்கையை தளர்த்திய சூர்யா பட தயாரிப்பாளர் | பிரபல தாதாவுடன் தொடர்பு ; போலீசாரின் விசாரணை வளையத்தில் 'பிசாசு' நடிகை? | தினசரி லப்பர் பந்து நாயகியின் காலை தொட்டு வணங்கும் கணவர் | சுந்தரி நடிகைக்கு திடீர் திருமணம் | இயக்குனரின் படமாக இருக்குமா ரஜினியின் 'வேட்டையன்'? | ஹிந்தி பிக்பாஸில் முதல் தமிழ் போட்டியாளராக நுழைந்த சூர்யாவின் கதாநாயகி |
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் தனது 51வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தற்காலிகமாக 'DNS' என அழைக்கப்படுகிறது. இதில் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜூனா, ஜிம் சார்ப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றார். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக ஐதராபாத் மற்றும் திருப்பதி பகுதிகளில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு கோவாவில் தொடங்குகிறது. இதில் தனுஷ், நாகார்ஜூனா இருவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் 10 நாட்கள் படமாக்கப்படும் என்கிறார்கள்.