ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
போட்டிகள் நிறைந்த உலகம் சினிமா உலகம். யார் அதிக வசூலைப் பெறுகிறார்கள் என கடந்த சில வருடங்களாகவே கடும் போட்டி நிலவி வருகிறது. தமிழ் சினிமாவின் டாப் வசூல் நடிகர்களில் முக்கியமான நால்வர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித். இவர்களில் விஜய் சினிமாவை விட்டு விலகினால் அவருடைய இடம் யாருக்கு என்பதே இப்போது எழுந்துள்ள ஒரு கேள்வி.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் ரஜினிகாந்த் தான் வசூல் நாயகனாக கடந்த பல வருடங்களாக இருந்து வருகிறார். அவருடைய வசூல் சாதனைகளைக் கடக்க விஜய், அஜித் ஆகியோர் முயன்று வருகிறார்கள்.
2019 பொங்கலுக்கு ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட', அஜித் நடித்த 'விஸ்வாசம்' ஆகிய படங்கள் வெளிவந்தன. அந்த இரண்டு படங்களின் வசூல் குறித்த தகவல்கள் அப்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்தின. 'பேட்ட' படத்தை விட 'விஸ்வாசம்' படம்தான் அதிக வசூலைப் பெற்றது என்றார்கள்.
கடந்த 2023ம் வருடத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'ஜெயிலர்' படம் 600 கோடி வசூலைக் கடந்ததாக சொல்லப்பட்டது. அதன்பின் வந்த விஜய் நடித்த 'லியோ' படமும் 600 கோடி வசூல் சாதனையைப் புரிந்தது என்றார்கள்.
கடந்த சில வருடங்களில் ரஜினிகாந்த்தை விட விஜய் தான் வசூல் ரீதியாக முன்னணியில் இருக்கிறார் என்றும் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களிலும் பேசப்பட்டது. அரசியலில் இறங்க இருப்பதால், அடுத்து ஒரு புதிய படத்துடன் சினிமாவை விட்டு விலகுவதாக விஜய் அறிவித்துள்ள நிலையில் ஒரு புதிய விவாதம் ஆரம்பமாகியுள்ளது.
விஜய்யின் இடத்தைப் பிடிக்க யாருக்கு அந்த வரவேற்பு உள்ளது என்பது குறித்து சமூக வலைத்தளங்களில் பல கருத்துக்களைப் பார்க்க முடிகிறது. சிவகார்த்திகேயன், தனுஷ், சிலம்பரசன் ஆகியோர் பெயர்கள்தான் அதில் அதிகமாக அடிபடுகிறது.
விஜய்யுடன் சமகால நடிகராகக் கருதப்படும் சூர்யா வசூல் ரீதியாக மிகப் பெரிய வெற்றிகளை இதுவரை கொடுக்கவில்லை. மிகப் பெரிய வெற்றி என்பது 200 கோடிக்கும் அதிகமான வசூல். கார்த்தி, விஜய் சேதுபதி ஆகியோரது மார்க்கெட் நிலவரம் ஏற்ற இறக்கங்களுடன் இருக்கிறது.
விஜய் தற்போது நடித்து வரும் 'கோட்' படம், அடுத்து நடிக்க உள்ள அவரது 69வது படம் ஆகியவை அவரது திரையுலகப் பயணத்தின் கடைசி படங்கள் என்பதால் அதிகமான வசூலைக் குவிக்க வாய்ப்புகள் உள்ளது. அவர் முழுமையாக சினிமாவை விட்டு விலகிப் போன பிறகுதான் அவரது இடத்தை நிரப்பப் போவது யார் என்பது பற்றிப் பேச முடியும்.
ஒரு படம் ஓடவில்லை என்றாலே ஹீரோக்களின் நிலைமை தற்போது கடுமையாக பாதிக்கப்படுகிறது. விஜய் சினிமாவை விட்டு விலக இன்னும் இரண்டு ஆண்டுகள், இரண்டு படங்கள் இருக்கிறது. அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதுவரை 'உங்களில் யார் அடுத்த விஜய் ?' என 'டாக் ஷோ' நடத்தாமல் இருப்பதே சிறப்பு.