''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
விஷாலை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றிய படம் சண்டக்கோழி. இந்த படத்தை லிங்குசாமி இயக்கி இருந்தார். ராஜ்கிரண், மீரா ஜாஸ்மின், லால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படம் வெளியாகி 18 வருடங்கள் ஆகிறது. இதை நினைவுப்படுத்தி விஷால் வெளியிட்டுள்ளபதிவில் கூறியிருப்பதாவது :
18 வருடங்களுக்கு முன்பு 2005 டிசம்பர் 16 அன்று தமிழ் சினிமாவில் 'சண்டக்கோழி' என்கிற மேஜிக் மூலமாக வெள்ளித்திரையில் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக என்னுடைய திரையுலக பயணத்தை துவக்கி வைத்த இந்த நாளை இப்போதும் நம்ப முடியவில்லை அல்லது என் உணர்வுகளை, எண்ணங்களை வார்த்தைகளில் அடக்க முடியவில்லை. இன்றுவரை அனைவராலும் என்மீது காட்டப்பட்டு வரும் அன்பு மற்றும் ஆதரவு என்கிற ஒரே காரணத்திற்காக அப்போதிருந்து இத்தனை வருடங்களுக்குப் பிறகும் பார்வையாளர்களில் ஒருவனாகவே தொடரும் நான் அப்போது என்னை திரும்பி பார்க்கவே இல்லை.
எனக்கு மேலே உள்ள கடவுளுக்கும் மற்றும் கடவுள்கள் போன்ற என்னுடைய பெற்றோர், என்னை நம்பிய என்னுடைய இயக்குநர் லிங்குசாமி, மேலும் கடைசியாக உலகெங்கிலும் உள்ள தியேட்டர்களில் ரசிகர்கள் உருவில் நான் பார்த்த கடவுள்களுக்கும் தலைவணங்கி நன்றி சொல்கிறேன். எப்போதுமே உங்கள் அனைவருக்கும் கடன்பட்டுள்ளதுடன், என்னுடைய தந்தை ஜி.கே ரெட்டி மற்றும் எனது குரு அர்ஜுன் சார் ஆகியோரின் கனவை தொடர்வேன். உங்களுக்கு நன்றி சொல்வது என்பது மட்டுமே போதுமானது அல்ல.. கடவுள் ஆசீர்வதிக்கட்டும். என்று கூறியுள்ளார்.