ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பிறந்தவர் சான்வி மேக்னா. 2019ம் ஆண்டு பிலால்பூர் போலீஸ் ஸ்டேஷன் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு பிரேம விமானம், பித்தா கத்தலு படங்களில் நடித்து புகழ் பெற்றார். தற்போது மணிகண்டன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமாகிறார். இந்த படத்தத நக்கலைட்ஸ் என்ற யு டியூப் சேனல் மூலம் புகழ்பெற்ற ராஜேஷ்வர் காளிசாமி இயக்குகிறார். இந்தப் படத்துக்கு வைஷாக் இசை அமைக்கிறார். குரு சோமசுந்தரம், ஆர்.சுந்தர்ராஜன் உட்பட பலர் நடிக்கின்றனர்.
படம் பற்றி ராஜேஷ்வர் காளிசாமி கூறும்போது, “இந்தக் கதையை சில வருடங்களுக்கு முன்பே உருவாக்கிவிட்டோம். இதில் மணிகண்டன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து அவரிடம் சொன்னோம். அவருக்கும் பிடித்திருந்தது. இப்போது படப்பிடிப்பைத் தொடங்குகிறோம். ஒரு மிடில் கிளாஸ் இளைஞன் தினமும் குடும்பத்தை நடத்துவதே அட்வெஞ்சர் போல இருக்கிறது. இதுதான் ஒன்லைன். குடும்பப் பின்னணியில் உருவாகும் காமெடி கதை. முழுக்க கோவையில் படப்பிடிப்பு நடக்கிறது. வித்தியாசமான கதைக்களம், நகைச்சுவைப் பின்னணியில் மணிகண்டன் ஒரு கலக்கு கலக்குவார் என்கிறார்.