''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
ஒரு படத்தின் பட்ஜெட்டில் கணிசமான பகுதி சம்பளமாகத்தான் செல்லும் என்பார்கள். ஆனால் யாருக்குமே சம்பளம் கொடுக்காமல் நடிகர் ஜெய் ஆகாஷ், ‛ஜெய் விஜயம்' என்ற படத்தை இயக்கி, அவரே தயாரித்தும், நடித்தும் இருக்கிறார். இதில் அக்ஷயா கண்டமுத்தன் கதாநாயகியாக நடிக்கிறார். சதீஷ்குமார் இசை அமைத்துள்ளார். பால்பாண்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது.
தில் ஜெய் ஆகாஷ் பேசியதாவது: ‛‛இது சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். ஜெய் விஜயம் என்று படத்துக்கு டைட்டிலை வைத்ததற்கு காரணம் என் பெயர் ஜெய், விஜயம் என்றால் வெற்றி. இதற்கு முன்பு பெரிய பட்ஜெட் படம் செய்தேன். எவ்வளவு செலவு செய்தாலும் கதைதான் மிக முக்கியம். எனவே நல்ல கதைகள் தேர்வு செய்யச் சொன்னார்கள். ஆனால் கிடைக்கவில்லை. எதுவுமே வித்தியாசமாக இல்லை. அதனால் ஒரு ஆங்கில படத்திலிருந்து இந்த கதையை எடுத்தேன். அதற்காக நிறைய விலை கொடுத்துவிட்டேன். அது என்ன கதை என்பதை இப்போது சொல்ல மாட்டேன்.
படம் ரியாலிட்டியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு மலையாள படம் எப்படி எடுப்பார்களோ அப்படி எடுத்திருக்கிறேன். இதில் நடித்த எல்லோருக்குமே நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால் அவர்கள் யாருமே சம்பளம் வாங்காமல் நடித்தார்கள். ஹீரோயின் அக்ஷயா கூட சம்பளம் வாங்கவில்லை. டிவியில் பிரபலமாக நடித்து வரும் இவரை நான் தான் என்னுடைய அமைச்சர் ரிட்டர்ன் படத்தில் அறிமுகப்படுத்தினேன். அந்த படத்துக்கு சம்பளம் கொடுத்தேன். ஆனால் கதை பிடித்திருந்ததால் ஜெய் விஜயம் படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்தார்.