தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தொடர் தோல்விகளுக்கு பிறகு நாக சைதன்யா நடிக்கும் தெலுங்கு படம் 'தண்டல்'. இதனை 'கார்த்திகேயா' படங்களை இயக்கிய சந்தூ மொண்டேட்டி இயக்குகிறார். நாக சைதன்யா ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இருவரும் இணைந்து நடித்த 'லவ் ஸ்டோரி' படம் தெலுங்கில் பெரிய வெற்றி பெற்றது. அதற்கு பிறகு இப்போது மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள்.
இந்த படம் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியில் வசிக்கும் மீனவ குடும்பங்களின் பின்னணியில் உருவாகும் லவ் அண்ட் ஆக்ஷன் மூவி. இதற்காக நாக சைதன்யா அந்த பகுதி மீனவர்களுடன் சில காலம் தங்கிருந்து அவர்களின் மேனரிசம், பேச்சு வழக்கு இவற்றை கற்றார். தற்போது அதே போன்று சாய் பல்லவிக்கு தனியாக ஸ்ரீகாகுளம் மீனவ பெண்களின் பேச்சு வழக்கு, மேனிரசம் குறித்த பயிற்சி பட்டறை நடத்தப்படுகிறது. இரண்டு வார பயிற்சிக்கு பிறகு அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.
இதுபற்றி இயக்குநர் சந்து மொண்டேட்டி கூறும்போது, “படத்தில் நாயகிக்கும் முக்கியத்துவம் உள்ளது. அதனால் பயிற்சிப் பட்டறைகளில் அவர் கலந்துகொண்டார். சிறப்பு பயிற்சியாளரிடம் ஸ்ரீகாகுளம் வட்டார வழக்கில் பேச பயிற்சி அளிக்கப்படுகிறது. அர்ப்பணிப்போடு அதை அவர் கற்று வருகிறார்” என்றார்.