திருமணத்திற்கு தயாரான ரம்யா பாண்டியன் : யோகா மாஸ்டரை கரம் பிடிக்கிறார் | தள்ளி வைக்கப்பட்ட இந்தியன் 3 ரிலீஸ் | சிவாவை தொடர்ந்து பிரசாந்த் நீலுடன் இணையும் அஜித் | கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா டீசர் வெளியானது | கர்ப்பமாக இருக்கும் 'கபாலி' கதாநாயகி ராதிகா ஆப்தே | பிளாஷ்பேக் : வில்லனுக்கு மரியாதை தந்த ரஜினி | பிச்சைக்காரனாக நடிக்க நிஜமாகவே பிச்சை எடுத்த கவின் | மோசடி நிறுவனத்துடன் தொடர்பா? - தமன்னாவிடம் அமலாக்கத்துறை திடீர் விசாரணை | நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன்: ராமநாதபுரத்தில் கவுதமி முழக்கம் | பிளாஷ்பேக் : 52 ஆயிரத்தில் பாகவதர் தயாரித்த படம் |
மலையாளத்தில் ஒன்பதாம் நூற்றாண்டு வரலாற்று பின்னணியில் மிகப் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது 'கத்தனார்' திரைப்படம். ஜெயசூர்யா கதாநாயகனாக நடித்து வரும் இந்த படத்தில் நடிப்பதன் மூலம் நடிகை அனுஷ்கா முதன்முறையாக மலையாள திரையுலகில் அடி எடுத்து வைக்கிறார். மலையாள திரையுலகிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் இது என்று சொல்லப்படுகிறது. இயக்குனர் ரோஜின் தாமஸ் என்பவர் இயக்கி வரும் இந்த படத்தை மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான கோகுலம் பிலிம்ஸ் தயாரிக்கிறது. ஏழு மொழிகளில் இந்தப்படம் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சமீபத்தில் சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார் நடிகர் மோகன்லால். படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்த அவருக்கு படக்குழுவினர் ஒரு விநாயகர் சிலையை பரிசளித்து வரவேற்றுள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த படத்தில் மோகன்லாலும் ஒரு சிறப்பு தோற்றத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்பது போன்ற தகவல்கள் சோசியல் மீடியாவில் யூகமாக கிளம்பியுள்ளன.