எமர்ஜென்சி படத்திற்கு பஞ்சாபில் தடை : கங்கனா கோபம் | 'விடாமுயற்சி' ரீமேக் உரிமை சிக்கலுக்குத் தீர்வு | ஷங்கருக்கு ஆதரவாகப் பேசினாரா தமன்? | ரசிகர்கள் கல் எறிய மாட்டார்கள் என நம்புகிறேன் : விஷால் | விரைவில் திரைக்கு வரும் தினேஷின் கருப்பு பல்சர் | விஜயகாந்த் படத்தின் தலைப்பில் நடிக்கிறாரா தனுஷ்? | சமரச பேச்சுவார்த்தை - ரவி மோகன், ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு தள்ளிவைப்பு | ரஜினியின் ஜெயிலர் 2 அறிமுக டீசரின் மேக்கிங் வீடியோ வெளியானது | இயக்குனர், தயாரிப்பாளர் ஜெயமுருகன் காலமானார் | விவசாயத்தின் முக்கியத்துவம் பேசும் 'மருதம்' |
'அண்டே சுந்தரனிகி' படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் விவேக் ஆத்ரேயா நடிகர் நானி கூட்டணி 'சரிபோதா சனிவாரம்' என்கிற படத்தின் மூலம் இணைந்துள்ளனர். தமிழில் 'சூர்யாவின் சனிக்கிழமை' என தலைப்பு வைத்துள்ளனர். இதில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நானி உடன் இணைந்து நடிக்கின்றனர். டிவிவி எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜெக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார்.
கடந்த மாதத்தில் இதன் பூஜை நிகழ்வு நடைபெற்றது. இந்த நிலையில் இதன் படப்பிடிப்பு ஆக்ஷன் காட்சியுடன் தொடங்கியதாக தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தின் மூலம் அறிவித்துள்ளனர்.