மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படம் அக்டோபர் 19ம் தேதி திரைக்கு வருகிறது. அனிருத் இசையமைத்துள்ளார். பல ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். தற்போது உள்நாடு - வெளிநாடுகளில் இப்படத்தின் டிக்கெட் புக்கிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் வருகிற 19-ம் தேதி மற்ற மாநிலங்களில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி கிடைத்த நிலையில், தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சிக்கு அனுமதி கிடைத்துள்ளது.
இந்த நிலையில் தற்போது லியோ படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் ஆகிய இருவரும் தங்களது எக்ஸ் பக்கத்தில் ஒரே மாதிரியான புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார்கள். அதன் பின்னணியில் விஜய்யின் போஸ்டர் இடம்பெற்றுள்ளது. அதற்கு முன்பு நின்று இவர்கள் இருவரும் இணைந்த கைகளாக போஸ் கொடுத்துள்ளார்கள். அதோடு, ‛‛locked and Loaded Leo அக்டோபர் 19'' என்றும் பதிவிட்டுள்ளார்கள்.