'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
விஜய் நடித்துள்ள லியோ படம் வருகிற 19ஆம் தேதி திரைக்கு வருகிறது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. மேலும், இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு கடந்த மாதமே வெளிநாடுகளில் தொடங்கிவிட்டது. விஜய்க்கு அதிக அளவு ரசிகர் உள்ள அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் 6 வாரங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது. ஆனால் ரிலீஸ்க்கு இன்னும் நான்கு நாட்கள் உள்ள நிலையில் அமெரிக்காவில் லியோ படத்தின் பிரிமியர் காட்சிகளை ரத்து செய்துள்ளார்கள்.
லியோ படத்தை அனுப்புவதற்கு காலதாமதம் ஆனதால் அங்குள்ள ஐமேக்ஸ் திரையரங்குகளில் திரையிட இருந்த பிரிமியர் காட்சிகள் ரத்து செய்யப்படுகிறதாம். அதன் காரணமாக, பிரிமியர் காட்சிகளுக்கு டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணத்தை திருப்பி அனுப்பி உள்ளார்களாம். என்றாலும் ஐமேக்ஸ் இல்லாத தியேட்டர்களில் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் லியோ படத்தின் டிக்கெட் முன்பதிவு தமிழகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. அப்படி தொடங்கிய சில மணி நேரங்களிலேயே பல தியேட்டர்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்த்து விட்டன. என்றாலும் சென்னையில் உள்ள இன்னும் சில திரையரங்குகளில் லியோ டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படாமலேயே உள்ளது.