2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கிய போட்டியாக பார்க்கப்பட்ட இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான போட்டி நேற்று (அக்.,14) ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியை காண ஏராளமான அரசியல் தலைவர்களும், நடிகர், நடிகைகளும் குவிந்தார்கள்.
தமிழ் நடிகர்களில் நடிகர் சதீஷும் இந்த கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்துள்ளார். அப்போது பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தியதைக் கொண்டாடும் விதமாக அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கானோர் வந்தே மாதரம் பாடலை பாடி உள்ளார்கள். அப்போது நடிகர் சதீஷூம் சேர்ந்து அந்த பாடலை பாடியுள்ளார். இது குறித்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.