ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் |
மாஜி ஹீரோயினான அம்பிகா, அஜித் நடித்த உயிரோடு உயிராக, அமர்க்களம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், அமர்க்களம் படத்தில் நடித்து வந்த போது அஜித் செய்த ஒரு உதவி குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், ‛‛அமர்க்களம் படத்தில் நாங்கள் நடித்துக் கொண்டிருந்த போது ஒரு குழந்தைக்கு அறுவை சிகிச்சைக்கு பணம் தேவைப்படுகிறது என்ற ஒரு தகவலை செய்தித்தாள் மூலம் பார்த்தார் அஜித். உடனடியாக அது குறித்து விசாரித்தவர் தனது அலுவலகத்திற்கு போன் செய்து ஒரு குறிப்பிட்ட தொகையை சொல்லி, இதை உடனடியாக அந்த மருத்துவமனைக்கு கொண்டு கொடுங்கள் என்று உத்தரவு போட்டார்.
இப்படி தன்னிடத்தில் நேரில் வந்து உதவி கேட்க வராமலேயே செய்தித்தாளில் வந்த ஒரு தகவலை பார்த்து அது குறித்து விசாரித்து தாமாக தேடிச் சென்று உதவி செய்யக் கூடியவர்தான் அஜித்குமார். இது போன்ற நல்ல உள்ளம் கொண்ட மனிதர்களை பார்ப்பது மிகவும் அரிது'' என்று கூறியுள்ளார் நடிகை அம்பிகா.