நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
மாநகரம் படத்தில் இயக்குனரானவர் லோகேஷ் கனகராஜ். அதையடுத்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என இயக்கியவர் அடுத்தபடியாக ரஜினிகாந்த் நடிக்கும் 171வது படத்தை இயக்கப் போகிறார். இந்த நிலையில், ரஜினியை வைத்து தான் இயக்கப் போகும் படத்தின் கதை குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும்போது, ரஜினி 171வது படம் கண்டிப்பாக எல்.சி.யு.,வில் வராது. அது வேறு மாதிரி கதைகளம். அதோடு இதுவரை நான் இயக்கியதில் ஒரு புதுவிதமான படமாக இருக்கும்.
இந்த படத்தின் கதையை ரஜினியிடம் சொல்வதற்கு முன்பு விஜய்யிடம் தான் கூறினேன். அதைக் கேட்டதும் இந்த கதை மிக சிறப்பாக உள்ளது. எந்த ஒரு கதையையும் கேட்ட உடனேயே நான் இம்ப்ரஸ் ஆக மாட்டேன். ஆனால் இந்த கதை என்னை ரொம்பவே ஈர்த்து விட்டது என்று விஜய் கூறினார். அதன் பிறகு தான் ரஜினி இடத்தில் அந்த கதையை சொல்லுமாறு அனிருத் கூறினார். அன்று இரவே ரஜினியை சந்தித்து அந்த கதையை சொன்னேன். கதையைக் கேட்ட மறு நிமிடமே எனக்கு பிடித்து விட்டது. உடனே இந்த கதையை பண்ணலாம் என்று சொல்லிவிட்டார் ரஜினி.
அவர் அதிக ஆர்வம் காட்டியதினால்தான் அந்த படத்தை உடனே எடுக்க திட்டமிட்டேன் என்று கூறி இருக்கும் லோகேஷ் கனகராஜ், ரஜினியை வைத்து நான் இயக்கும் 171வது படம் கண்டிப்பாக ரஜினியின் கடைசி படமல்ல. அவருடைய லைன் அப் என்னவென்று எனக்கு தெரியும். ஆனால் அதை நான் சொல்ல மாட்டேன் என்றும் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.