புஷ்பா 2 படத்தில் இணைந்த ஸ்ரீ லீலா! | இரண்டாவது முறையாக இணையும் சிறுத்தை கூட்டணி! | புஷ்பா 2 புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு 7 நகரங்களுக்கு செல்லும் படக்குழு! | டெல்லி கணேஷ் மறைவு; திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி | ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு காஸ்ட்லி வாட்ச் பரிசளித்த சிவகார்த்திகேயன் | 10 நாட்களில் ரூ. 200 கோடி எட்டிய அமரன்; லக்கி பாஸ்கர் ரூ.77 கோடியை கடந்தது | மீண்டும் பிரபாஸுடன் இணையும் திரிஷா | ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன்! | புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி ஹீரோ | மாலத்தீவில் தோழிகளுடன் ஒன்று கூடிய மகேஷ்பாபு-ராம்சரண் மனைவியர் |
ரஜினியின் 170வது படத்தை ஞானவேல் இயக்குகிறார். அனிருத் இசையமைக்க, லைகா நிறுவனம் தயாரிக்கிறது. சமூக கருத்து கொண்ட ஒரு படமாக உருவாகிறது. இதில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகி வருகிறது. நேற்று நடிகைகள் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இதன் படப்பிடிப்புக்காக ரஜினி இன்று திருவனந்தபுரம் கிளம்பி சென்றார்.
இந்நிலையில் இன்று(அக்., 3) நடிகர்கள் ராணா டகுபதி, பஹத் பாசில் ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சனும் நடிப்பதாக அறிவித்துள்ளனர். இதன்மூலம் 32 ஆண்டுகளுக்கு பின் ரஜினியும், அமிதாப்பும் இணைந்து நடிக்கின்றனர். கடைசியாக இவர்கள் இருவரும் 1991ல் ஹும் என்ற ஹிந்தி படத்தில் நடித்தனர். அதன்பின் இணையாத இந்த கூட்டணி இப்போது மீண்டும் இணைவதன் மூலம் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.
அதோடு அமிதாப் பச்சனின் முதல் நேரடி தமிழ் படமாகவும் இது அமைய போகிறது. முன்னதாக எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உயர்ந்த மனிதன் என்ற படத்தில் நடித்தார். ஆனால் அந்தபடம் பாதியில் நின்று போனது. இப்போது ரஜினி படம் மூலம் தமிழில் களமிறங்குகிறார் அமிதாப்.