என் மனைவியை காப்பாற்றுங்க : முதல்வர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை வேண்டுகோள் | விவாகரத்து வரை சினிமாவிற்கு முழுக்கு, என் குடும்பத்தை கெடுத்தவர் மூன்றெழுத்து நடிகை : ரவி மோகன் கண்ணீர் பேட்டி | 'ஜனநாயகன்' படத்தை கசிய விட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது | ஒன்றிணைந்து பேசுவோம் : திரையுலகினருக்கு கமல்ஹாசன் அழைப்பு | ரவி மோகனை பிரிந்தார் கெனிஷா : சென்னையை விட்டும் வெளியேறினார் | தேவர் மகன் வீட்டில் படமாக்கப்பட்ட மலையாளப் படம் 'தேவர்' | உருவ கேலி : மிருணாள் தாக்கூருக்கு அக்ஷய் குமார் வழங்கிய அறிவுரை | 30 ஆண்டுகள் பிரிவு : கணவருக்கு நன்றி சொன்ன சரிதா | முதல்வர் விஜயை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள் | பிரபுதேவா, வடிவேலுவின் ‛பேங் பேங்' படப்பிடிப்பு நிறைவு |

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா மற்றும் பலர் நடிக்க உள்ள 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு நாளை(அக்., 4) ஆரம்பமாக உள்ளது. துபாய், அபுதாபி உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு முதலில் நடக்கும் என தகவல் வெளியானது. இந்நிலையில் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் துவங்குகிறது. இதற்காக அஜித் அஜர்பைஜான் கிளம்பி சென்றார். விமான நிலையத்தில் அவர் கிளம்பி சென்ற போட்டோ, வீடியோ வெளியாகி உள்ளது. அதேப்போல் நடிகை த்ரிஷாவும் அஜர்பைஜான் புறப்பட்டு சென்றுள்ளார். இடைவிடாமல் படப்பிடிப்பை நடத்தி 2024ம் ஆண்டின் முதல் பாதியிலேயே படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.