‛ஜனநாயகன்' படத்தின் செகண்ட்லுக் போஸ்டர்: குஷியான ரசிகர்கள் | சவால் விடும் தாரா நடிகை | பத்மபூஷன் - சீனியர் நடிகர்களுடன் இணைந்த அஜித் | சர்ச்சை பேச்சு: பகிரங்க மன்னிப்பு கேட்ட மிஷ்கின் | அஜித்துக்கு பத்ம பூஷன் விருது: திரையுலகினர் வாழ்த்து | 50 நாளை நிறைவு செய்த 'புஷ்பா 2' | அரசியலுக்கு வருகிறாரா திரிஷா? லேட்டஸ்ட் தகவல் | ராஜமவுலி படத்துக்காக சிங்கத்துடன் சண்டை போடும் மகேஷ் பாபு! | ஹிந்தி ஆடியன்சை குறி வைக்கும் நாகசைதன்யா- சாய் பல்லவியின் தண்டேல்! | ஆங்கிலத்திலும் வெளியாகும் ரஜினியின் ஜெயிலர்-2 |
தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த 'ஒக்கடு, போக்கிரி' ஆகிய படங்களை தமிழில் விஜய் ரீமேக் செய்து 'கில்லி, போக்கிரி' என நடித்து பெரிய வெற்றியைப் பெற்றார். விஜய்யின் ஆக்ஷன் படங்களில் அவருக்கு மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படங்கள் அவை. தெலுங்கு நடிகரான மகேஷ் பாபுவை நிறையவே பாலோ செய்பவர் விஜய். அந்த பார்முலா விஜய்க்கு தமிழில் நல்ல ஒரு வெற்றியைக் கொடுத்த உதாரணம் இருக்கிறது.
மகேஷ் பாபு தற்போது நடித்து வரும் 'குண்டூர் காரம்' என்ற படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக மீனாட்சி சவுத்ரி நடித்து வருகிறார். இவர் வேறு யாருமல்ல, கடந்த மாதம் விஜய் ஆண்டனி நடித்து வெளிவந்த 'கொலை' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அப்படத்தில் கொலை செய்யப்படும் மாடல் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பு மிஸ் ஐமா 2017, பெமினா மிஸ் இந்தியா 2018, மிஸ் கிராண்டு இன்டர்நேஷனல் 2018 ஆகிய அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டவர். பின்னர் 2021ல் வெளிவந்த 'இச்சடா வாஹனமுல்லு நிலுபரடு' தெலுங்குப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அடுத்து 'கிலாடி, ஹிட் 2' ஆகிய தெலுங்குப் படங்களில் நடித்தார். தமிழில் 'கொலை' படத்திற்குப் பிறகு ஆர்ஜே பாலாஜி நடித்துள்ள 'சிங்கப்பூர் சலூன்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
தெலுங்கில் மகேஷ் பாபு ஜோடியாக நடிக்கவே அவரை விஜய் 68 படத்திற்கும் அழைத்து வந்துள்ளார்கள். விஜய் 68 வெளியாவதற்கு முன்பாக 'குண்டூர் காரம்' படம் வெளிவந்துவிடும். அதனால், தெலுங்கிலும் விஜய் 68 படமும் அங்குள்ள ரசிகர்களிடம் எளிதில் சென்று சேரும் என்பது கணக்கு.