ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், விஷால், எஸ்ஜே சூர்யா, ரித்து வர்மா மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் 15ம் தேதி வெளியான படம் 'மார்க் ஆண்டனி'. விஷால், எஸ்ஜே சூர்யா இருவரும் இரு வேடங்களில் நடிக்க, டைம் டிராவல் கதையாக வெளிவந்த இந்தப் படம் ரசிகர்களைக் கவர்ந்து வெற்றிப் படமானது.
இப்படத்தின் டிரைலருக்குக் கிடைத்த வரவேற்பை வைத்தே படம் வெற்றி பெறும் என்று படம் வெளியாவதற்கு முன்பே சொன்னார்கள். அது போலவே படமும் வெற்றி பெற்று வசூலைக் குவித்தது. விஷால் நடித்து இதுவரை வெளிவந்த எந்த ஒரு படமும் 100 கோடி வசூலைப் பெற்றதில்லை. அவர் நடித்து 2018ல் வெளிவந்த 'இரும்புத் திரை' படம் 60 கோடி வரை வசூலித்தது. அதுதான் அவரது படங்களில் அதிக வசூலைப் பெற்ற படம்.
இப்போது அந்த வசூலை 'மார்க் ஆண்டனி' முறியடித்துள்ளது. இன்னும் சில நாட்களில் இப்படம் 100 கோடி வசூலைத் தொட்டுவிடும் என ரசிகர் ஒருவரின் கேள்விக்கு டுவிட்டரில் பதிலளித்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் வினோத் குமார். விஷாலின் முதல் 100 கோடி படமாக இந்தப் படம் அமையப் போகிறது.