'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் |
இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த தமிழரான முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் '800'. ஸ்ரீபதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் முரளிதரன் கதாபாத்திரத்தில் மதுர் மிட்டல் நடித்துள்ளார். அவரது மனைவி மலர் கதாபாத்திரத்தில் மலையாள நடிகை மகிமா நம்பியார் நடித்துள்ளார். இப்படம் வரும் அக்டோபர் 6ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் இந்தியா முழுவதும் வெளியிடுகிறார். தெலுங்குத் திரையுலகத்தில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக அனுபவம் கொண்டவர். 1991ல் பாலகிருஷ்ணா, மோகினி நடித்து வெளிவந்த டைம் மிஷின் படமான 'அபூர்வா 369' படத்தைத் தயாரித்தவர். கடந்த வருடம் சமந்தா நடித்து வெளிவந்த 'யசோதா' படத்தையும் தயாரித்துள்ளார்.
நேற்று ஐதராபாத்தில் நடந்த 800 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது பேசிய அவர், “ஆகஸ்ட் மாதம் இப்படத்திற்குள் நான் வந்தேன். இந்தப் படத்தை வெளியிடும் பொறுப்பை இயக்குனர் ஸ்ரீபதி என்னிடம் ஒப்படைத்தார். முரளிதரனுக்கும் அது மகிழ்ச்சியாக அமைந்தது. இப்படத்தில் நான் வருவதற்கு முன்பே இப்படத்திற்காக அவர்கள் என்னவெல்லாம் செய்தார்கள் என்பது எனக்குத் தெரியும். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் கிரிக்கெட் மைதானங்களில் இப்படத்தைப் பிரம்மாண்டமாகவும் அதிக செலவு செய்தும் படமாக்கியுள்ளார்கள். இந்தியா முழுவதும் இப்படத்தை 1100 தியேட்டர்களில் வெளியிடுகிறோம்,” என்று தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்திற்குப் பிறகு இந்தியாவில் தயாராகி வெளியாக உள்ள இலங்கை வீரரான முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படம் இது. தோனி நமது நாட்டு வீரர் என்பதால் ரசிகர்கள் விரும்பிப் பார்த்தார்கள். முரளிதரன் கிரிக்கெட் உலகின் சாதனையாளர் என்பது சரி, அதே சமயம் அவர் தமிழராக இருந்தாலும் இலங்கையைச் சேர்ந்தவர். அவரது வாழ்க்கை வரலாற்றை ரசிகர்கள் எப்படி ரசிக்கப் போகிறார்கள் என்பது சில தினங்களில் தெரிந்துவிடும்.