காதலி ஷீத்தலை பிரிந்த பப்லு! | துபாய் வீட்டில் கிருஷ்ண கீர்த்தனை நடத்திய ஏ.ஆர்.ரகுமான்! வைரலாகும் வீடியோ!! | 46 வயதாகும் ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகை சங்கீதாவை மணந்தார்! | அடுத்த ஆண்டு ஏப்ரலில் துப்பறிவாளன்-2 படப்பிடிப்பு தொடக்கம்! | கவின், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் புதிய கூட்டணி! | சலார் படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ்? | “மதிமாறன்” பர்ஸ்ட் லுக் வெளியீடு | டிவி நடிகர் சித்து நாயகனாக அறிமுகமாகும் 'அகோரி' | மீண்டும் சர்ச்சை: 'வாடிவாசல்' சூர்யா நடிப்பாரா அல்லது விலகுவாரா? | டிசம்பர் 15ல் 8 புதிய படங்கள் ரிலீஸ் |
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட அம்மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமீபத்தில் பெங்களூருவில் ‛பந்த்' அறிவிக்கப்பட்ட நிலையில், நாளை (செப்.,29) மாநிலம் முழுவதும் பந்த்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நடிகர் சித்தார்த் நடித்து இன்று வெளியான சித்தா படம், கன்னடத்தில் ‛சிக்கு' என்ற பெயரில் வெளியானது. இதற்காக பெங்களூருவில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அங்கு வந்த கன்னட ஆதாரவாளர்கள் சித்தார்த்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதன், காரணமாக நிகழ்ச்சியில் இருந்து நடிகர் சித்தார்த் பாதியில் வெளியேறினார்.