ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | 'தங்கலான், கங்குவா' படங்களைத் தொடர்ந்து 'வா வாத்தியார்' படத்திற்கும் சிக்கல் | 'சிக்மா' படத்தில் நடிக்கிறாரா ஜேசன் சஞ்சய் ? | முதலாம் ஆண்டு திருமண நாளில் திருமண வீடியோவை வெளியிட்ட நாக சைதன்யா, சோபிதா துலிபலா | கடைசி நேரத்தில் திடீரென தள்ளி வைக்கப்பட்ட 'அகண்டா 2' |

“நான் எப்போதுமே காமெடியன்தான்” என்று யோகி பாபு திரும்ப திரும்ப சொன்னாலும் அவர் கதையின் நாயகனாக நடிக்கும் படங்களும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. கடைசியாக 'லக்கி மேன்' படம் வெளிவந்தது. தற்போது 'பூமர் அங்கிள்' படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் அடுத்து கதையின் நாயகனாக நடிக்கும் படத்தின் பணி தென்காசியில் தொடங்கி உள்ளது.
இந்த படத்தை 23 பிரேம்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் சஞ்சய் ராகவன் மற்றும் ரூக்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் மது அலெக்சாண்டர் இணைந்து தயாரிக்கிறார்கள். ஜெய் என்ற புதுமுகம் இயக்குகிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. இது காமெடி கலந்த கிராமத்து குடும்ப கதை என்று கூறப்படுகிறது. தென்காசி, குற்றாலம் பகுதியில் ஒரே கட்டமாக படத்தை முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.