ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து திடீர் மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். சின்னத்திரையில் எதிர்நீச்சல் என்ற சீரியலில் ஆதி குணசேகரன் என்ற ரோலில் நடித்து அசத்தி வந்த இவரின் மறைவு திரையுலகினர் மற்றும் சின்னத்திரை ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மாரிமுத்துவின் உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகினர் மற்றும் சின்னத்திரை நடிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாசர், சரத்குமார், ரோபோ சங்கர், ராஜேஷ், இயக்குனர் வசந்த், எஸ்வி சேகர், முனீஸ்காந்த், வையாபுரி, ரமேஷ் கண்ணா, எம்எஸ் பாஸ்கர், சத்யபிரியா, எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் திருச்செல்வம் மற்றும் அந்த தொடரில் நடித்துள்ள சக நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர் புகழ், ரவி மரியா, சென்ட்ராயன், தீபா மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.
மாரிமுத்துவின் இறுதிச்சடங்கு நாளை(செப்., 9) தேனி, வருஷநாட்டில் உள்ள சொந்த ஊரில் நடக்கிறது.