ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
ரஜினி நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற 'சந்திரமுகி' படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. இதில் ரஜினி நடித்த கேரக்டரில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். ஜோதிகா நடித்த சந்திரமுகி கேரக்டரில் கங்கனா நடித்துள்ளார். இவர்கள் தவிர மகிமா நம்பியார், வடிவேலு நடித்துள்ளனர். முதல் பாகத்தை இயக்கிய பி.வாசு இயக்கி உள்ளார். படம் வருகிற 15ம் தேதி வெளிவருகிறது.
இந்த நிலையில் சந்திரமுகியாக நடித்துள்ள கங்கனா குறித்து ஏற்கெனவே சந்திரமுகியாக நடித்த ஜோதிகா தனது சமூக வலைத்தளத்தில் எழுதியிருப்பதாவது: இந்திய சினிமாவில் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவரான கங்கனா, சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடிப்பதை கண்டு மிகவும் பெருமையடைகிறேன். சந்திரமுகி கதாபாத்திரத்தில் நீங்கள் கவர்ச்சியாக தோற்றமளிக்கிறீர்கள். நான் உங்கள் ரசிகை. இந்த திரைப்படத்தில் உங்களின் நடிப்பை காண ஆவலுடன் காத்திருக்கிறேன். லாரன்ஸ் மாஸ்டருக்கும், இயக்குநர் பி.வாசு சாருக்கும் மீண்டும் ஒரு மாபெரும் வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள். என பதிவிட்டிருக்கிறார்.