2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் |
சென்னை : நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து திடீர் மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். சின்னத்திரையில் எதிர்நீச்சல் என்ற சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் மிரட்டல் வில்லனாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், இந்த சீரியலுக்கான டப்பிங் பேசிய போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.
மாரிமுத்துவின் நிஜ பெயர் மறைந்து போகி அவர் நடித்து வந்த சீரியலின் ஆதி குணசேகரன் பெயர் மக்கள் மத்தியில் பிரபலமானது. சமூகவலைதளங்களில் ரசிகர்களும் எதிர்நீச்சல் குணசேகரன் என குறிப்பிட்டே அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதோடு அவரின் பல பேட்டிகளையும் பதிவிட்டு நினைவு கூர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் ஒரு காட்சியில் தனக்கு நெஞ்சு வலிப்பது போன்று கூறுவார் மாரிமுத்து. அதில் உடம்பு வலியா அல்லது மனசு வலியா என தெரியவில்லை. அப்பப்ப வலி வருது, ஏதோ எச்சரிக்கை பண்ணுவது என டயலாக் பேசி இருப்பார். அந்தக்காட்சியை இப்போது ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து நிஜமாகவே உங்களுக்கு இப்படி நடந்துவிட்டதே... என தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.