பூல் சக் மாப் : 60 கோடி நஷ்டஈடு கேட்டு பிவிஆர் ஐநாக்ஸ் வழக்கு | வியாபார நிலையில் முன்னேறிய சூரி | எங்கள் தங்கம், சூர்யவம்சம், மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார் | பிரதீப் ரங்கநாதனின் டுயூட் தீபாவளிக்கு வருகிறது | 'எல் 2 எம்புரான்'ஐ ஓவர்டேக் செய்த 'தொடரும்' | மே 9 படங்களின் வரவேற்பு நிலவரம் என்ன? | தேசிய பாதுகாப்பிற்கு நிதி வழங்கும் இளையராஜா | சசிகுமாரின் ப்ரீடம் ஜூலை 10ம் தேதி ரிலீஸ் | விஜய் தேவரகொண்டாவின் 36வது பிறந்தநாள் : வைரலாகும் ராஷ்மிகாவின் வாழ்த்து |
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரை நேயர்கள் மத்தியில் பிரபலமானவர் அமீர். இவர் நடன இயக்குநரும் கூட. பிக்பாஸ் வீட்டின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த பாவ்னியிடம் தனது காதலை சொல்லி அவரது மனதை கொள்ளை கொண்டார். தற்போது சோஷியல் மீடியாக்களில் இந்த ஜோடி தான் அடிக்கடி ஹாட் டாப்பிக்காக சுற்றி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளனர். இதற்கிடையில் அமீர் சைலண்டாக இரண்டு ஏழை மாணவர்களின் கல்வி செலவை ஏற்று உதவி வந்துள்ளார். ஆனால், அமீரால் தற்போது உதவ முடியாத காரணத்தால் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், 'நன்றாக படிக்கும் இரண்டு மாணவர்களின் கல்வி தற்போது கேள்விக்குறி ஆகிவிட்டது. அவர்களுக்கு தயவு செய்து உதவுங்கள். அப்படி உதவ நினைப்பவர்கள் என்னை தொடர்பு கொள்ளுங்கள்' என்று வேண்டுகோள் வைத்துள்ளார். அமீருடைய இந்த நல்ல குணமானது ரசிகர்களை நெகிழ செய்துள்ளது. நிச்சயமாக அந்த மாணவர்களுக்கு உதவிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.