காதலியை திருமணம் செய்தார் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு 'பைசன்' படக்குழு 10 லட்சம் நிதி | மஹாகாளியாக மாறும் பூமி ஷெட்டி | விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி |

பாலிவுட் நடிகர் அமீர்கான், தான் நடித்து வரும் படங்ளில் தனது கதாபாத்திரத்திற்காக உடல் எடையை ஏற்றுவது, இறக்குவது, கெட்டப் மாற்றுவது என அர்ப்பணிப்பு உணர்வுடன் நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர். அதற்காகவே அவரை மிஸ்டர் பர்பெக்ஷனிஸ்ட் என்று கூட குறிப்பிடுவார்கள். அந்த வகையில் ஹிந்தியில் தனது படத்தில் நடிப்பதற்காக தொடர்ந்து பத்து நாட்களுக்கு மேல் குளிக்காமல் படப்பிடிப்பில் அமீர்கான் கலந்து கொண்டார் என்று ஒரு செய்தி சொல்லப்பட்டு வந்தது. இது உண்மை தான் சமீபத்திய பேட்டியில் அமீர்கான் ஒப்புக்கொண்டார்.
அதாவது 1989ல் ராக் என்கிற படத்தில் அவர் கதாநாயகனாக நடித்தார். அந்த படத்தில் அவர் வீட்டை விட்டு வெளியேறி நாடோடியாக தெருவில் சுற்றும் மனிதனாக நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்திற்கு அழுக்கடைந்த  தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே தொடர்ந்து 12 நாட்கள் குளிக்காமலேயே படப்பிடிப்பில் கலந்து கொண்டேன் என்று கூறியுள்ளார் அமீர்கான்.
அது மட்டுமல்ல மீண்டும் ஒருமுறை அதாவது 1998ல் குலாம் என்கிற படத்தில் நடித்தபோது கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி ஒரு வாரத்திற்கு மேல் படமாக்கப்பட்டது. அந்த சண்டைக் காட்சியில் மோதும்போது அடிபட்ட தழும்புகள், காயங்கள் இவை எல்லாம் குளித்தால் மறைந்துவிடும். அதுமட்டுமல்ல குளித்துவிட்டு மறுநாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டால் ஒரு பிரஸ் லுக் மீண்டும் வந்துவிடும். இதனை தவிர்ப்பதற்காக அந்த சண்டைக்காட்சிகளை படமாக்கிய நாட்களில் கிட்டத்தட்ட ஒரு வாரம் குளிக்காமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும் கூறியுள்ளார் அமீர்கான்.
 
           
             
           
             
           
             
           
            