சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

அட்லீ இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ஷாரூக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு மற்றும் பலர் நடிக்கும் படம் 'ஜவான்'. செப்டம்பர் 7ம் தேதி ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.
இன்று இப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய விழா சென்னையில் நடைபெற உள்ளது. தாம்பரம் அருகில் உள்ள ஒரு தனியார் இஞ்சினியரிங் கல்லூரியில் நடைபெறும் இந்த விழாவில் கலந்து கொள்ள ஷாரூக்கான் இன்று(ஆக., 30) சென்னை வருகிறார்.
அது குறித்து, “வணக்கம் சென்னை, நான் வருகிறேன்... அனைத்து ஜவான்கள், சாய்ராம் இஞ்சினியரிங் கல்லூரியில் உள்ள பெண்கள், ஆண்கள், தயாராக இருங்கள். உங்களை சந்திப்பதில் ஆர்வமாக இருக்கிறேன். நீங்கள் கேட்டால் சில 'த த தையா' கூட செய்யலாம்,” என ஷாரூக் தெரிவித்துள்ளார்.
படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, யோகிபாபு, பிரியாமணி என தமிழ் நடிகர்கள், நடிகைகள் இருப்பதால் சென்னையில் பிரம்மாண்ட விழாவை நடத்துகிறார்கள்.




